அடேங்கப்பா.! பாசத்தால் கணவன் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட பெண்
கணவர் பெயரை தனது நெற்றியில் பெண் ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
காதல்
பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இங்கு கடந்த மாதம், பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட பெண்ணுக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவை இதுவரை 1.25 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் 2.6 லட்சம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் போட்டுள்ளனர். கணவர் சதீஷின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை நெற்றியில் டாட்டூவாக அவர் போட்டுக்கொண்டார் என்று கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.