எனக்கு ஒரு பார்ட்னர் வேண்டும்; வாடகை இதுதான் - ட்ரெண்டாகும் இளம்பெண்ணின் பதிவு!

Twitter Bengaluru
By Sumathi Mar 01, 2024 05:49 AM GMT
Report

பெண் ஒருவர் பார்ட்னர் தேவை எனப் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.

பார்ட்னர் தேவை

பெங்களூரைச் சேர்ந்தவர் உதிஷா மதன். டிசைனராக உள்ளார். இவர் கோரமங்களாவில் உள்ள தனது இரண்டு படுக்கையறை, கிச்சன் வீட்டுக்கு ஒரு பார்ட்னர் தேவை.ரூ.13750ஐ வாடகையாகத் தந்தால் போதும் என பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

udhisha-madhan

மேலும், அதனை ஒரு டிசைன் ஆப் மூலம் வீடு பற்றிய படங்கள், தகவல்களை எளிதாகப் படிக்கும்படியும் ஈர்க்கும் வகையிலும் வடிவமைத்திருந்தார். இதனைப் பார்த்த பலர் அவரைப் பாராட்டி கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடக்கூடாது; கட்டுப்படுத்தனும்.. போஸ்டரால் பரபரப்பு!

முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடக்கூடாது; கட்டுப்படுத்தனும்.. போஸ்டரால் பரபரப்பு!


 வைரல் பதிவு

இந்நிலையில், உதிஷா மதன் மற்றவர்களை விட மிகக் குறைந்த வாடகையை, குறிப்பாக பெங்களூரில் பிரபலமான, பரபரப்பான பகுதிக்கு கேட்கிறார் என சிலர் குறிப்பிட்டிருந்தனர்.

முன்னதாக, 2023ல் பெங்களூரில் வீட்டு வாடகை மிக அதிகமாக உயர்ந்தது. ஒயிட்ஃபீல்டில் சுமார் 1,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நிலையான 2பிஎச்கே பிளாட் வாடகை 31 சதவீதமும், சர்ஜாபூரில் உள்ள அத்தகைய வீடுகளுக்கான வாடகை 27 சதவீதமும் அதிகரித்துள்ளது.