ஒரு முத்தத்திற்கு 50 ஆயிரம்; மிரட்டிய ஆசிரியை - கடைசியில் கதறிய தொழிலதிபர்
தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்லை மீறிய உறவு
பெங்களூருவில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றின் முதல்வராக இருந்தவர் ஸ்ரீதேவி ருடகி(25). பகுதி நேர வேலையாக பள்ளி முதல்வர் பணியை மேற்கொண்டுள்ளார்.
இதர நேரங்களில் தனது ஃபோட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் பிரபலமாகியுள்ளார். இவரின், மழலையர் பள்ளியில் தொழிலதிபர் ஒருவர், தனது மூன்றாவது மகளை கடந்த 2023 ஆம் ஆண்டு சேர்த்துள்ளார்.
மிரட்டிய ஆசிரியை..
உடனே செல்போனில் பேசி வந்துள்ளனர். அது நாளடைவில் அவுட்டிங் வரை நெருக்கமாகியுள்ளது. இந்நிலையில், ஒரு முத்தத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் கேட்க, தொழிலதிபர் லட்சக்கணக்கில் இழந்துள்ளார். இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடும்பத்துடன் குஜராத் செல்வதாக கூறி, தனது மகளின், மாற்று சான்றிதழை வாங்குவற்காக தொழிலதிபர் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது, தனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில், போட்டோ, வீடியோக்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், தனது ஆண் நண்பர்கள் கணேஷ் காலே மற்றும் சாகர் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து மிரட்டியுள்ளார்.
இதனால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல், போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், ஸ்ரீதேவி ருடகி மற்றும் அவரின் ஆண் நண்பர்கள் என மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.