வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் : கடும் வெள்ளத்தால் டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் ஐடி நிறுவன ஊழியர்கள்

Bengaluru
By Irumporai Sep 06, 2022 05:51 AM GMT
Report

பெங்களூருவில் பெய்து வரும் கன மழைகாரணமாக ஐடி நிறுவனங்களுக்கும் டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

பெங்களூருவில் கனமழை

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்... என்ற பழமொழியினை உண்மையாகும் வகையில் பல சம்பவங்கள் நடந்து வரும் அந்த வகையில் பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டிய கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கிறது பெங்களூரு குறிப்பாகசாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

டிராக்டரில் செல்லும் ஐடி ஊழியர்கள்

மழையால் எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு டிராக்டர்களை எடுத்துச் சென்றனர்.

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் :  கடும் வெள்ளத்தால் டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் ஐடி நிறுவன ஊழியர்கள் | Bengaluru Take Tractor Rides To Reach Office


விவசாயத்திற்காக டிராக்டர்களில் சென்ற காலம் மாறி, ஐடி நிறுவனங்களுக்கும் டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

இயற்கைக்குத்தான் எத்தனை நாளங்கள் நாடிகள்,  பாலைவனத்தை சோலை வனமாகவும் சோலை வனத்தை பாலைவனமாக்கும் திறன் இயற்க்கைக்கு உண்டு என்பது தற்போது நிருபணமாகியுள்ளது.

டிராக்டர் சவாரி பற்றி ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கூறுகையில், அலுவலகத்தில் லீவு எடுக்க முடியாது.எங்கள் பணி பாதிக்கப்படுகிறது. ரூ.50 கொடுத்து டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடுத்த டிராக்டர் வரும் வரை காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்