8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளிலிருந்து ஆணுறைகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் - ஷாக்கான அதிகாரிகள்...!

Karnataka Bengaluru
By Nandhini 2 மாதங்கள் முன்

பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் பைகளிலிருந்து ஆணுறைகள்

பெங்களூருவில் உள்ள சில பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் பைகளை சோதனை செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து, கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்கள் (KAMS)கூட மாணவர்களின் பைகளைச் சரிபார்க்கத் தொடங்குமாறு பள்ளிகளை கேட்டுக் கொண்டன.

இதன் பின்னர், மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளியின் முதன்மை ஆசிரியர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் செல்போன் இருக்கிறதா என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கர்ப்பத்தடை மாத்திரைகள், சிகரெட் ஆகியவை இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஒருங்கிணைந்த கவுன்சிலிங் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு மேற்கொண்டுள்ளது.     

karnataka-bengaluru-school