உணவகத்தில் அரசியல் பேசக்கூடாது.. வாடிக்கையாளர்களுக்கு விநோத எச்சரிக்கை - எங்க தெரியுமா?
உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ள விநோத எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உணவகம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
அது தவிர ரியல் எஸ்டேட் அல்லது அரசியல் பற்றிய எந்தவொரு விவாதத்தையும் சாப்பிடும்போது அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுப் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
விநோத எச்சரிக்கை
இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு இது விசித்திரமாக இருக்கிறது. மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை இவர்கள் ஏன் கண்காணிக்க வேண்டும்?
அவர்கள் சாப்பிடும் உணவுக்குப் பணம் செலுத்துகிறார்கள் தானே" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் கருத்து தெரிவித்துள்ளார்.