10 ரூபாய் பண நோட்டுக்களை அள்ளி அள்ளி வீசிய நபர்...ஓடி வந்து எடுத்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Bengaluru
By Nandhini Jan 24, 2023 10:04 AM GMT
Report

பண நோட்டுக்களை அள்ளி அள்ளி வீசிய நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பண நோட்டை அள்ளி அள்ளி வீசிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

பெங்களூருவில் உள்ள கேஆர் மார்க்கெட் மேம்பாலத்தில் கோட் சூட் போட்டுக்கொண்டு வந்த ஒரு நபர், தன் பையில் இருந்த 10 ரூபாய் நோட்டுகளை அள்ளி, அள்ளி மேம்பாலத்திலிருந்து வீசினார். 10 ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்ததால், இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்தனர்.

மேலும், மேம்பாலத்தில் வாகனத்தில் சென்றவர்கள் இதைப் பார்த்ததும் உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த நபரிடம் வந்து 10 ரூபாய் நோட்டுக்களை வாங்கினர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

bengaluru-man-throws-rs-10-notes-viral-video