அலுவலகம் செல்ல டாக்ஸி கிடைக்கவில்லை - தன்னை தானே டெலிவரி செய்த நபர்

Karnataka Bengaluru
By Karthikraja Feb 09, 2025 02:16 PM GMT
Report

அலுவலகம் செல்ல டாக்ஸி கிடைக்காத நிலையில் போர்ட்டர் மூலம் தன்னை இளைஞர் டெலிவரி செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு டிராஃபிக்

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகராக அறியப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. 

bengaluru man delivery him self to office via porter

இந்நிலையில் இளைஞர் ஒருவர் அலுவலகத்திற்கு தாமதமாக செல்ல கூடாது என்ற காரணத்திற்காக porter செயலி மூலம் தன்னை தானே அலுவலகத்திற்கு டெலிவரி செய்துள்ளார்.

போர்ட்டர் மூலம் பயணம்

உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி சுமோட்டோ போன்ற செயலிகளை போல் பொருட்களை டெலிவரி செய்ய Porter செயலி பயன்படுத்தப்படுகிறது.

பெங்களூருவில் வசித்து வரும் பதிக் குகரே என்ற இளைஞர், உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல ஓலா, ஊபர் போன்ற செயலிகளில் டாக்ஸி புக் செய்ய முயன்றுள்ளார். ஆனால் டாக்ஸி கிடைக்காத நிலையில், Porter செயலியில் தன்னை புக் செய்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று போர்ட்டர் மூலம் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என டெலிவெரி ஏஜென்ட்டுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவரின் புதிய முயற்சியை பாராட்டி வருகிறார்கள்