இளம்பெண்ணை நடுரோட்டில் சரமாறியாக தாக்கிய இளைஞர் - பரபரப்பு பின்னணி
காதலை மறுத்த இளம்பெண்ணை, இளைஞர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
காதலுக்கு மறுப்பு
பெங்களூரு, ஞானஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி முன் இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக இளைஞர் ஒருவர் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
]
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நவீன், அப்பெண்ணை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
பாலியல் தொல்லை
அவரது தொல்லையிலிருந்து தப்பிக்க அப்பெண் தனது வேலையை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு மாறியும், நவீன் விடாமல் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று காரில் வந்த நவீன், அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து, தலையில் தாக்கி அநாகரீகமாக நடந்துகொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து போலீசார் நவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.