5 ரூபாய் டிஃபன், 10 ரூபாய் சாப்பாடு; இனி டச் ஸ்கிரீன் ஆர்டர் தான் - எந்த ஹோட்டல் தெரியுமா?
இந்திரா கேண்டீனில் டிஜிட்டல் வசதிகள் அறிமுகம் செய்ய அரசு முடுவெடுத்துள்ளது.
இந்திரா கேண்டீன்
கர்நாடகாவில் அப்போதைய காங்கிரஸ் அரசு இந்திரா கேண்டீன்களை கொண்டு வந்தது. அங்கு, காலை டிஃபன் 5 ரூபாய்க்கும், மதிய சாப்பாடு மற்றும் இரவு டின்னர் ஆகியவை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் இட்லி, பொங்கல், உப்புமா வழங்கப்படும். மதியமும், இரவும் வெஜிடபிள் ரைஸ், சாம்பார் ரைஸ், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.
டச் ஸ்கிரீன் வசதி
2023ல் இதனை பராமரிக்க என பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றன. இந்நிலையில், டச் ஸ்கிரீன் வசதிகளுடன் கூடிய உணவு ஆர்டர் செய்யும் டிஜிட்டல் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சிஸ்டத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து பில்லை பெற்றுக் கொண்டு உரிய கட்டணத்தை செலுத்தினால் போதும்.
அதன்பின், டோக்கன் அடிப்படையில் அழைத்து ஆர்டர் செய்த உணவு வழங்கப்படும்.
தற்போது, ஆர்.ஆர் நகரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் பெங்களூர் நகர் முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.