குஷ்பு இட்லி கேள்விபட்டிருப்போம்.. இது என்ன குச்சி ஐஸ் இட்லி ? - வைரலாகும் புகைப்படம்

StickIdli AnandMahindra ViralIdli
By Irumporai Oct 01, 2021 11:21 AM GMT
Report

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக் இட்லி கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் குச்சி இட்லி என்ற உணவு டிரெண்டாகி வருகிறது.

ட்விட்டரில் மகேந்திர குமார் என்பவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர் பெங்களூருவில் தான் குச்சி ஐஸ் ஸ்டைலில் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டதாக அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பிரபலங்களும் அந்த குச்சி இட்லி புகைப்படத்தை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். விருப்பத்திற்குரிய ஒரு உணவை இப்படி கொலை செய்யாதீர்கள், இதெல்லாம் தேவையற்ற வீண் முயற்சி என பலர் கருத்து கூறியுள்ளனர்.

. இட்லி என்றால் வட்டமாக தான் இருக்க வேண்டும், வேறு வடிவத்தை எல்லாம் ஏற்க முடியாது என சிலர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த புகைப்படத்தில் குச்சி ஐஸ் குச்சியில் இட்லியை செய்து வைத்திருக்கிறார். அருகில் சாம்பார் சட்னி இருக்கிறது.

ஒரு குச்சி இட்லி சார்பாரில் முக்கிய நிலையில் இருக்கிறது. இந்த புகைப்படம் வைரலாக பரவிய நிலையில் இது குறித்து பலர் விவாதித்து வருகின்றனர். பலர் இந்த குச்சி இட்லி எங்கு கிடைக்கும் என விசாரித்து வருகின்றனர். இந்த குச்சி இட்லி குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்