இடிந்து விழுந்து தரைமட்டமான வீடு - உயிர் தப்பிய தொழிலாளர்கள்
பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பெங்களூரு வில்சன் கார்ட் பகுதியில் உள்ள பழமையான வீடு ஒன்று இருந்துள்ளது.இங்கு மெட்ரொ ரயில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வாடகை கொடுத்து தங்கியுள்ளனர்.
1962 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் மெட்ரோ ரயில் கட்டுமான பணியாளர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் கடந்த மூக்று நாட்களாக தொடரும் மழையால் கட்டிடம் வலுவிலந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை முதல் கட்டிடம் விரிசல் விட தொடங்கியுள்ளது.இதை சுதாரித்துக்கொண்ட கட்டுமானப் பணியாளர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்து தரைமட்டமானது.இதனால் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகும் காட்சிகள் தற்போது வளைதலங்களில் வைரலாகி வருகிறது.