ரோட்டோர கடைகளில் சாப்பிடாதீங்க - மாநகராட்சி ஆணையர் அறிவுரை
சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவது கொரோனா பரவலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில்டந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைக் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்றுவதற்கான திட்டம் இருக்கிறது என்று மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் மோசமாக பரவுவதால், தெருவோர கடைகளில் சாப்பிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் சாலையோர வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் சுத்தம் என்கிற அடிப்படையில் அவர் கருத்து தெரிவித்திருப்பார் என மாநகராட்சி சார்பில் கூறப்படுகிறது.