சொகுசு பஸ் தீப்பிடித்து கோர விபத்து - 20 பேர் உடல் கருகி பலி
சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்து
பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது.

அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து,
20 பேர் பலி
சாலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி வந்து சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து லாரி இரண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த கோர விபத்தில் பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய சிலர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.