கார் இல்ல, ஆட்டோ இல்ல; பஸ்ஸில் நின்றுக்கொண்டே வந்த அனில் கும்ப்ளே - பயணிகள் அதிர்ச்சி!
அனில் கும்ப்ளே அரசுப் பேருந்தில் வீட்டிற்கு செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
போராட்டம்
காங்கிரஸ், மகளிருக்கு இலவச அரசுப் பேருந்து பயணத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த சக்தி திட்டத்தின் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இலவச பேருந்து திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி அதற்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.
வைரல் ஃபோட்டோ
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் தனியார் வாகனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
BMTC trip back home today from the airport. pic.twitter.com/jUTfHk1HrE
— Anil Kumble (@anilkumble1074) September 11, 2023
இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அணியின் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அரசு பேருந்தில் பயணித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, விமான நிலையத்திலிருந்து இன்று வீடு திரும்பும் பெங்களூரு அரசுப்பேருந்து பயணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.