8 வடிவ நடைப்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு...!
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவது மட்டுமின்றி சரியான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாகும்.
அந்த வகையில் வெளிநாடுகளில் “இன்பினிட்டி வாக்கிங்” என்றழைக்கப்படும் 8 வடிவ நடைபயிற்சி அதிக மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த எட்டு வடிவ நடைபயிற்சியை காலை 5 முதல் 6 மணி வரையான நேரத்திலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையான நேரத்திலும் மேற்கொள்வதே சிறந்தது.
18 வயதை தாண்டிய எவரும் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனை மேற்கொள்ளும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். அல்லது உணவு சாப்பிட்ட பிறகு 3 முதல் 4 மணி நேரம் கழித்து இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். மேலும் எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது.
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள கூடாது. உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனைகள், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு இதனை மேற்கொள்ளலாம்.
இதனை மேற்கொள்வதால் கழுத்து வலி, தோள்பட்டை வலி,முதுகு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா, சைனஸ், மூல நோய்கள், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள் போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.