ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இவ்வளவு நன்மைகளா? - சாப்பிட்டு பாருங்க

benefitsofstwaberry stwaberrybenefits stwaberry
By Petchi Avudaiappan Mar 03, 2022 08:12 PM GMT
Report

பார்த்தவுடன் நம் கண்களை கவரும் ஸ்டாபெர்ரி பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

  • ஸ்ட்ராபெரி பழங்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால் அவை  சருமத்தின் வயதை குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  •  இதில் உள்ள நார்ச்சத்துக்கள் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் பயன்படுகிறது.
  • ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் அவை பிரிரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கிறது. 
  • இதிலுள்ள வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் உதவுகிறது. 
  •  வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் தோலில் உள்ள கறைகளின் மீது ஒரு பாத்திரத்தில் ஸ்ட்ராபெர்ரிகளை வடிகட்டி, அதில் 2 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து செய்த பேஸ்ட்டை தடவினால் அவை மறையும்.