கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிஞ்சா வேண்டான்னு சொல்ல மாட்டீங்க

kavunirice blackrice கருப்புகவுனிஅரிசி benefitsofkavunirice
By Petchi Avudaiappan Feb 09, 2022 05:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கருப்பு கவுனி அரிசி இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கருமை நிறத்தில் காணப்படும் இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசிக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

  • கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிகளவு நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால்  இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு அது தொடர்பான பிரச்சனைகளும் குறைகிறது. 
  •  இது டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து  இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த கருப்பு கவுனி அரிசி உதவுகிறது. 
  • வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் அதிக புரதச்சத்து அடங்கியுள்ளது. இது  உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
  • இதிலுள்ள ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இதனால்  வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. 
  • கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் கருப்பு கவுனி அரிசியில்  குறைவாகவும், நார்ச்சத்தும் அதிகமாகவும் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது வரப்பிரசாதமாகும்.
  • கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் உள்ளதால் இதனை அளவாக எடுத்துக் கொள்வது சிறந்தது.