இதை வைத்து தண்ணீரால் வாய் கொப்பளித்தாலே போதும் தொண்டை சார்ந்த பிரச்சனைகள் தீரும்

infections benefits cardamom good for throat
By Swetha Subash Jan 04, 2022 06:06 AM GMT
Report

இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன.

புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா‌ய் பெ‌ரிது‌ம் உதவு‌ம்.

ஏல‌க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏ‌ல‌க்கா‌ய் சே‌ர்‌த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல் குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபாடுக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.

இதனை இருபாலரும் அரு‌ந்தலா‌ம். இருவரு‌க்குமே பல‌ன் தரு‌ம். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும்.

எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ‌ள் ம‌ட்டுமே பயன்படுத்த வே‌ண்டு‌ம்.