தினமும் இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?..குறிப்பாக பெண்களுக்கு?

ginger benefits helps relieve period cramps reduces stress
By Swetha Subash Dec 29, 2021 02:07 PM GMT
Report

இஞ்சி டீயை வழக்கமாக உட்கொள்வதால், மருந்து உட்கொள்ளும் அளவு குறைவதாகக் கூறியுள்ளனர்.செரிமான அமைப்பை அதிகரிக்கவும் இஞ்சி உதவுகிறது.

(குறிப்பு : இந்த செய்தியில் வரும் மருத்துவப் பொருட்களை பயன்படுத்தும் முன்பு ஊட்ட சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறவும்)

நம் மனநிலையை அமைதி படுத்துவது மட்டுமன்றி தொற்று, அஜீரணம் , சளி , இருமல் , தொண்டை வலி என பருவகால தொந்தரவுகளுக்கும் மருந்தாக இருக்கும்.

ஏனெனில் இஞ்சியில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் இருப்பதால், இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

பொதுவாக ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படும் மசாலா பொருட்களில் மஞ்சள், ஏலக்காய் மற்றும் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கின்றன .

அதில் இஞ்சியை புதியதாகவோ, உலர்ந்ததாகவோ, பொடியாகவோ அல்லது எண்ணெய் அல்லது சாறாகவோ பயன்படுத்தலாம்.

இஞ்சியை நாம் தினமும் குடிக்கும் டீயில் கொதிக்க வைத்து குடித்தாலும் அதன் நன்மைகளை பெற முடியும். இதை ஆய்விலும் நிரூபித்துள்ளனர்.

அதாவது இஞ்சியில் இருக்கும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது

.குறிப்பாக தலைவலி, சளி , மாதவிடாய் சமயத்தில் கூட இஞ்சி டீ குடிப்பது பலன் தரும் என்கின்றனர். இஞ்சி டீயை வழக்கமாக உட்கொள்வதால், மருந்து உட்கொள்ளும் அளவு குறைவதாகக் கூறியுள்ளனர்.

செரிமான அமைப்பை அதிகரிக்கவும் இஞ்சி உதவுகிறது.

இஞ்சி டீயின் பலன்கள் :

குமட்டலை தடுக்கிறது : பயணத்திற்கு முன் ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது, இயக்க நோயுடன் தொடர்புடைய குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்க உதவும்.

எனவே நீண்ட பயணம், டிராவல் ஒத்துக்கொள்ளாதவர்கள் இஞ்சி டீ ஒரு கிளாஸ் குடித்தால் எல்லாம் பறந்து போகும்.

வயிற்றுக்கு நல்லது :

நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை எளிதில் உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை தூண்டுவதற்கும் இஞ்சி உதவுகிறது.இதனால் வயிற்று வலி, வயிற்று மந்தம் இருக்காது.

வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது :

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு மருந்தாக இருக்கிறது.

சுவாச பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது : இஞ்சி தேநீர் ஜலதோஷத்தால் உண்டாகும் சுவாசப் பிரச்சனையை போக்க உதவுகிறது. சுற்றுச்சூழல் ஒவ்வாமைகளுடன் தொடர்புடைய சுவாச அறிகுறிகளுக்கு ஒரு கப் இஞ்சி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் :

இஞ்சி தேநீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது.

இது இதய பிரச்சனைகள் வருவதை குறைக்க உதவும். மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும் தமனிகளில் உருவாகும் கொழுப்பு படிவதை இஞ்சி தடுக்கிறது.

மாதவிடாய் அசௌகரியம் நீங்கும் :

மாதவிடாய் வலியால் அவதிப்படும் அனைத்து பெண்களுக்கும் இது உதவியாக இருக்கும். சூடான இஞ்சி தேநீர் வலியைப் போக்கவும் தசைகளை தளர்த்தவும் உதவும்.

மன அழுத்தத்தை போக்கும் :

இஞ்சி டீ உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்