முருங்கைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா?

Healthy Food Recipes Life Style
By Sakthi Raj Mar 11, 2026 07:53 AM GMT
Report

நாம் எல்லோரும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால், நம் கைகளிலே இருக்கக்கூடிய பல சத்தான உணவுகளை நாம் சாப்பிட தவறுகின்றோம். அதில் ஒன்றுதான் முருங்கைப்பூ. இந்த முருங்கைப்பூவில் சத்துக்கள் மட்டுமல்ல அதில் இருக்கக்கூடிய பல மருத்துவ ரகசியங்கள் நமக்கு தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம்.

முருங்கையின் பலன் பற்றி சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடைய அற்புத ஆற்றலை அறிந்ததாலே சித்தர்கள் முருங்கையை "பிரம்ம விருட்சம்" என்று அழைக்கிறார்கள். வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் இருந்தாலும் நாம் முருங்கைப் பூவை சாப்பிட தவறி விடுகின்றோம்.

முருங்கைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா? | Benefits Of Eating Moringa Flowers For Health

தவறியும் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

தவறியும் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

காரணம், அதில் நிறைந்து இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆதலால் முருங்கை பூவை விட முருங்கைக்காயை நாம் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்துகிறோம். இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் வேலை பளு , இரவு நேர வேலை போன்ற பணி சுமை அதிகம் இருக்கிறது.

அதனால் மன அழுத்தம் அவர்களுக்கு வருகிறது. மன அழுத்தம் ஏற்பட்டால் நரம்புகள் செயலிழந்து, நரம்பு தளர்ச்சி வர வாய்ப்புகள் இருக்கிறது. அந்த நேரங்களில் அவர்கள் முருங்கை பூவை கசாயம் வைத்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி வராமல் இருப்பதோடு நரம்பு தளர்ச்சி சரியாகும்.

முருங்கைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறதா? | Benefits Of Eating Moringa Flowers For Health

வெறும் தண்ணீரிலே கூட நாம் ஆரோக்கியமாக வாழலாம்.. எப்படி தெரியுமா?

வெறும் தண்ணீரிலே கூட நாம் ஆரோக்கியமாக வாழலாம்.. எப்படி தெரியுமா?

மேலும், திருமணம் ஆன தம்பதியினருக்கு தாம்பத்திய உறவில் நாட்டமில்லை போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் அவர்கள் முருங்கைக்பூவை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.

முருங்கை பூவை காய வைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலும் ஆண்மை கோளாறுகள் விலகும் என்கிறார்கள்.