சிறிய எலுமிச்சை சைஸில் இருக்கும் இலந்தைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? ; நோஞ்சான் குழந்தைகளுக்கு நல்லதாம்!

benefits immunity power indian jujube
By Swetha Subash Jan 05, 2022 12:03 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உணவு
Report

ஆங்கிலத்தில் பெர் அல்லது ஜுஜுப் என அழைக்கப்படும் இலந்தைப்பழம் இனிப்பும் புளிப்புமாக இருக்கும்.

இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைவாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மலச்சிக்கலைத் தீர்க்கிறது, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்துகிறது. இன்னும் பல நோய்களுக்கும் இது அருமருந்து எனக் கூறுகிறார் பிரபல டயட்டீசியன் ருஜுதா.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருஜுதா திவேகர்,

“நீங்கள் இந்த சீசனில் இலந்தைப்பழம் சாப்பிடுகிறீர்களா? தவறாமல் சாப்பிடுங்கள்.

அதில் வைட்டமின் சி அதிகம். ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதவைவிட இந்த சிறிய பழத்தில் அதிக வைட்டமின் உள்ளது. அடிக்கடி நோய்வாய்ப்படும் நோஞ்சான் குழந்தைகளுக்கு இது நல்லது” என்று பதிவிட்டுள்ளார்.

இலந்தைப்பழத்தில் வைட்டமின் ஏ, சி நிறைவாக இருக்கிறது. இத்துடன் பொட்டாசியம், இரும்புச் சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன.

அதுவர அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் 24ல் 18 வகையான அமினோ அமிலக் கூறுகள் இந்தப் பழத்தில் உள்ளன.

இதில் கலோரி மிகமிகக் குறைவு. அதனால் இதனை இடைப்பட்ட நேர ஸ்நாக்காக உண்ணலாம். இதில் நார்ச்சத்து அதிகம். உடல் எடையைக் குறைக்க இது உதவும்.