வாரம் ஒரு முறை பச்சை பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Healthy Food Recipes Life Style
By Sakthi Raj Mar 05, 2026 09:36 AM GMT
Report

ஒரு மனிதனுக்கு பணம், பொருள், செல்வாக்கு என்று எது இருந்தாலும் உடல் ஆரோக்கியம் சரியில்லை என்றால் கட்டாயம் அவனால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாம் சத்தான உணவுகளும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

அந்த வகையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது நல்ல ஆரோக்கியத்தை நாம் பெறலாம். அப்படியாக, அதீத ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை பயிறு ஒருவர் எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் பலம் பெறுகிறது.

வாரம் ஒரு முறை பச்சை பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? | Benefits Of Eating Green Gram Daily

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்

அதாவது பருப்பு வகைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது. அவற்றை நாம் தினமும் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.

மேலும் புரதத்துடன் பருப்பு வகைகளில் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற பல முக்கிய தாதுக்கள் உள்ளன. அதிலும் பச்சை பயிறு வகைகளில் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்து இருக்கிறது.

இவை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் பலத்தை கூட்டுகிறது. பச்சை பயிரில் கலோரிகள் குறைவாகவும் புரதம் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாகவும் உள்ளன. இவை உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகின்றன.

வாரம் ஒரு முறை பச்சை பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? | Benefits Of Eating Green Gram Daily

தவறியும் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

தவறியும் இரவு நேரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள்.. ஏன் தெரியுமா?

அதனால் உடல் பலவீனமாக உள்ளவர்களும் தசையை வளர்க்க விரும்புபவர்களும் இதை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான வலிமையை கொடுத்து தசை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மூளை வளர்ச்சிக்கும் பச்சை பயிறு மிகவும் நல்லது.

இவை நம் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும் சொல்லப்படுகின்றன. அதேபோல் மாணவர்கள் மற்றும் மனரீதியாக அதிக வேலை செய்பவர்கள் பச்சை பயறு எடுத்துக் கொள்ளும் பொழுது அவர்களின் அறிவு மேம்படுகிறது.

அதேபோல், பச்சை பயிறு செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சரியான செரிமானத்திற்கு உதவுகிறது. இவை மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.