காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Coconut price Life Style
By Sakthi Raj Feb 12, 2026 12:49 PM GMT
Report

   நம்முடைய சமையலில் தேங்காய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தேங்காய் உடைக்கும் பொழுது அதில் இருக்கும் தண்ணீரை வீடுகளில் இருக்கக்கூடிய குழந்தைகள் போட்டி போட்டு அருந்துவார்கள். ஒரு சிலர் தேங்காயை துருவும் பொழுதே சிறிதளவு எடுத்து சுவைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த தேங்காய் சுவையானது மட்டுமல்லாமல் நிறைய மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. அதாவது தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ வல்லுநர்கள் நமக்கு தெரிவிக்கிறார்கள்.

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Benefits Of Eating Coconut In Empty Stomach

இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்?

இறாலில் கருப்பு நரம்பை நீக்காவிட்டால் என்ன நடக்கும்?

ஒருவர் தினமும் 40 முதல் 50 கிராம் பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது என்று சொல்கிறார்கள். வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடும் பொழுது இதயம், தலைமுடி, சருமம் வயிறு போன்றவற்றுக்கு மிகச்சிறந்த அளவில் நன்மைகள் சேர்கிறதாம்.

மேலும் தேங்காய் சாப்பிடும் பொழுது செரிமான அமைப்பு பலப்படுத்துவதோடு நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் தேங்காய் எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கும் மிக முக்கிய பங்கு கொள்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Benefits Of Eating Coconut In Empty Stomach

நோய் எதிர்ப்பு சக்திகயை பலமடங்கு அதிகரிக்கும் வெள்ளை 'டீ'

நோய் எதிர்ப்பு சக்திகயை பலமடங்கு அதிகரிக்கும் வெள்ளை 'டீ'

இதை நாம் தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் பொழுது சருமம் எப்பொழுதும் இளமையான தோற்றத்துடன் இருப்பதோடு ஒரு நல்ல பொலிவையும் அவை பெறுகிறது. இதன் காரணமாகத்தான் முடி மற்றும் சரும பராமரிப்பு பொருட்களின் தேங்காய் முக்கிய இடம் பெறுகிறது. தேங்காய்க்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உண்டு.

இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. தேங்காயில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் தேங்காய் நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சில உபாதைகள் வரக்கூடும் என்பதால் கவனம் வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.