பாலில் நெய் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா? - உடனே டிரை பண்ணுங்க

benefitsofmilk benefitsofdrinkingmilkwithghee benefitsofghee heathtips
By Petchi Avudaiappan Mar 11, 2022 06:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உணவுப் பொருட்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. காலை எழுந்தது முதல் நம்மை சுறுசுறுப்பாக வைப்பதில் தொடங்கி இரவு நிம்மதியான தூக்கம் அளிப்பது வரை இவற்றின் செயல்பாடுகள் இன்றியமையாதவை.

பாலில் நெய் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா? - உடனே டிரை பண்ணுங்க | Benefits Of Drinking Milk With Ghee

அந்த வகையில் இரவு நேரத்தில் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும்.  அதில் நம்மில் பலரும் தேன் கலந்து குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால் இரவு தூங்கும் முன் பாலில்  பாலில் நெய் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்பது பலரும் அறியாத தகவல். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. 

  • பாலில் நெய் கலந்து குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு உடலின் ஆற்றல் வலிமை அதிகரிக்கும்.
  • இது அதிகப்படியான வேலையைச் செய்யத் தேவையான ஸ்டாமினாவை உடலுக்கு வழங்குகிறது. இதனால் உடல் சோர்வானது தடுக்கப்படும்.
  • பாலில் நெய் கலந்து குடிக்கும் போது அதிலுள்ள நைட்ரிக் அமிலம் செரிமான நொதியை மேம்படுத்தி பலவீனமான செரிமான மண்டலத்தை வலுவாக்கும். 
  • பாலில் நெய் கலந்து குடிப்பதால் பாலியல் செயல்பாடு, ஸ்டாமினா மற்றும் விந்து உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும் இது உடல் சூட்டைக் குறைத்து உடலுறவின் போது நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது.
  • பாலில் உள்ள கால்சியம், நெய் லூப்ரிகேட்டர் போன்று செயல்படுவதால் இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  • இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நம் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பை அளிக்கிறது.