வெயில் காலத்தில் லெமன் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? - ஆச்சர்ய தகவல்
இந்தியாவில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் ஏதாவது குளிர்ச்சியாக பானம் கிடைக்காதா என ஜூஸ் கடைகளை தேடி நம்மில் பலரும் தினமும் ஓடிக்கொண்டிருப்போம்.
பொதுவாக இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்கள் வெயில் சுட்டெரிக்கும் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் வெயிற்கால நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. என்னதான் நீர் பானங்களை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலும் வெயில் காலத்திற்கு ஏற்ற பழங்களை தேவையான அளவு குளிர்ச்சியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அந்த வகையில் கோடைக் காலத்தில் லெமன் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம். . இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ள லெமன் ஜூஸில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் பயனளிக்கிறது.
காபி, டீக்கு பதிலாக இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதால் உடல் ஆரோக்கியமாவதோடு சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுவதோடு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
- எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து கொழுப்புகளின் ஆக்ஸினேற்றத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து பசியைக் குறைப்பதால் அதிகமாக சாப்பிடுவது மற்றும் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வது கட்டுப்படுத்தப்படுகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமான செயல்முறை நன்றாக இருக்கும்.
- . எலுமிச்சை நீர் நம் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுவதோடு நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.
- வைட்டமின் சி தோல்களில் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இனிமேல் தினமும் லெமன் ஜூஸ் குடிக்க மறக்காதீங்க..!