கற்றாழை ஜூஸ் தினமும் குடிக்கிறிங்களா? இது தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க- ஏன் தெரியுமா?
கற்றாழை ஜூஸ் தினமும் காலையில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை
மூலிகை தாவரங்களில் கற்றாழை ஒன்று. இந்த தாவரத்தை நாம் வீடுகளில் பார்க்க முடியும். சருமத்தில் ஏற்படும் எரிச்சலைச் சரி செய் கற்றாழை மிகவும் பயனுள்ள மருந்துகளில் ஒன்றாக உள்ளது.
ஆக்ஸிஜனேற்றிகள், முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் (மெக்னீசியம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், கோலின், செலினியம் மற்றும் பொட்டாசியம்) மற்றும் அமினோ அமிலங்கள் அனைத்தும் கற்றாழை சாற்றில் ஏராளமாக உள்ளன.
இத்தகைய சிறப்பு மிக்க ஆலோவேரா ஜூஸ் தினமும் காலையில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம். கற்றாழைச் செடியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், கற்றாழைச் சாறு நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது.
ஆசிட் ரிஃப்ளக்ஸ், உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கக் கற்றாழை ஜூஸ் உதவும். கற்றாழையின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிறு மற்றும் குடல் அசௌகரியத்திற்குச் சரிசெய்ய உதவும்.
நன்மைகள்
கற்றாழையில் உங்கள் சருமத்திற்கு உதவும் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும் ஆலோவேரா ஜூஸ் தினமும் காலையில் குடிப்பதால் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது.
கற்றாழை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், குறிப்பாக நெல்லிக்காய், துளசி மற்றும் சீந்தில் பருப்பு சாறுடன் சேர்த்துச் சாப்பிடும்போது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும். உங்களுக்கு வாய் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் கற்றாழை ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும்.