முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
benefitsofcabbage
cabbageboiledwater
முட்டைகோஸ்
முட்டைகோஸ்வேகவைத்ததண்ணீர்
By Petchi Avudaiappan
நம்முடைய அன்றாட உணவில் சேர்க்கப்படும் தானியங்களும், காய்கறிகளும்,பழங்களும், பிற ஊட்டச்சத்து பொருட்களும் சில நேரங்களில் பலருக்கும் ஒத்துவராமல் போவதுண்டு. அவற்றில் ஒன்று முட்டைகோஸ். இதில் ஏராளமான பயன்கள் இருந்தும் இதன் வாசனை மற்றும் சுவை குறைவாக இருப்பதால் பலரும் இதனை ஒதுக்குவது வழக்கம்.
ஆனால் முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் சீரகத் தூள்,மிளகு சேர்த்து சூப் போல குடிப்பது மிகவும் சுவையாக இருப்பதோடு உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது.
- முட்டைகோஸ் வேகவைத்த நீரில் வைட்டமின் கே, வைட்டமின் பி1, பி3, பி6,பி5, புரதச்சத்து, சல்பர், இரும்புச்சத்து ஆகிய ஊட்டசத்துக்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் அதிகளவில் உள்ளன.
- முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வர சொத்தைப் பல், வாய்ப்புண் மற்றும் பற்களில் உள்ள புழுக்கள் நீங்கும்.
- முட்டைகோஸில் அதிக அளவிலாக ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு இதயத்தில், ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்கிறது.
- இந்த முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் கரைத்து உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.
- நரம்புகளின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீர் பயன்படுகிறது.
- முட்டைகோஸில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கே ஆகியவை எலும்புகளை உறுதியாக்கி மூட்டு வலி மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை போக்குகிறது.
- முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரை குடிப்பதாலும், அதில் முகத்தைக் கழுவுவதாலும் முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் தழும்புகள் குறைகிறது.
- கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் முட்டைகோஸ் வேகவைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.