நார் தேய்த்துக் குளித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? - ஆச்சர்ய தகவல்கள்

bodybrushingbath நார் தேய்த்துக் குளித்தால் கிடைக்கும் நன்மைகள்
By Petchi Avudaiappan Jan 03, 2022 06:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

சோப்புகள் இல்லாத காலத்தில் குளிக்கும்போது தேங்காய் நார் கொண்டு தான் உடல் முழுவதும் தேய்த்து அழுக்குகளை நீக்குவது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் அதற்கென தனி ஸ்பான்ஞ்கள் என அது உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

  •  குளிக்கும்போது நார் கொண்டு தேய்ப்பதால், உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். சருமத் துளைகள் நீங்கி சருமம் சுவாசம் பெறும். இதனால் புதிய செல்கள் உருவாகி உடல் பொலிவு பெறும். சருமம் ஆரோக்கியமாகும்.
  • காற்று மாசுபாட்டால் சருமத்தை சிதைக்கக் கூடிய கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதால் அவற்றை சருமத்திலிருந்து நீக்க முடியும். அதேபோல் உடல் வெளியேற்றும் கழிவுகள் சருமம் மூலமாக வெளியேறும்.அவை முற்றிலுமாக நீங்காவிட்டாலும் சரும நோய்கள் ஏற்படும். நார் கொண்டு தேய்த்தால் கழிவுகள் நீங்கி சருமம் இறுகும். கிருமிகளும் அண்டாது.
  • தசைகளின் இணைப்பைத் தூண்டி வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் சருமத்தின் மூலமாக வெளியேறும் வளர்ச்சிதை மாற்றக் கழிவுகளையும் வெளியேற்றும்.
  • உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளுக்கும் இரத்தத்தின் பாய்ச்சல் அதிகரிக்கும்.
  • நார் பயன்படுத்திக் குளிப்பதால், இயற்கையாகவே சருமம் மென்மைத் தன்மையை பெரும். நீங்கள் பார்லர் சென்று பெரும் பொலிவை இதிலேயே பெறலாம்.
  • நாம் சாதாரணமாக கையில் தேய்த்துக் குளிப்பதற்கும், நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. நார் கொண்டு தேய்த்துக் குளிக்கும்போது முழுமையான புத்துணர்ச்சியை உணர முடியும். உடலும் உற்சாகமடையும்.