பூசணி விதைகளால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் - மறக்காம சாப்பிடுங்க..

Healthtips benefitspumpkinseeds pumpkinseedsforwomen
By Petchi Avudaiappan Feb 18, 2022 08:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

நம்முடைய அன்றாட உணவில் சேர்க்கப்படும் காய்கறி வகைகளில் ஒன்றான இனிப்பு சுவையுடைய பூசணிக்காய் மட்டுமல்லாமல் அதன் விதை, பூ, காய், தண்டு, இலை மற்றும் வேர்களும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன. இதனை பெண்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

  • கர்ப்ப காலத்தில் நீரிழிவு, டைப் 2 நீரிழிவால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் தன்மை பூசணியில் இருப்பதால் இதனை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.. 
  • பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் பிரச்சினையால் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிகள், தைராய்டு பிரச்சினை, உடல் பருமன் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து விடுபட  பூசணி விதையை சேர்த்துக் கொள்வது நல்லது.
  • பூசணி விதைகளில் அதிக அளவில் ஆன்டி - ஆக்ஸிடண்ட்டுகள் இருப்பதால் அவை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. பூசணி விதையில் இருந்து கிடைக்கும் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
  • இதிலுள்ள ஆன்டி - ஆக்ஸிடண்ட்டுகளும், ஒமேகா கொழுப்பும் இதயத்தை மட்டும் பாதுகாப்பது மட்டுமல்லாமல் உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீர்ப் பாதைத் தொற்றை சரிசெய்ய உதவுகிறது.
  • பூசணி விதைகளில் உள்ள அமினோ அமிலங்களும் வைட்டமின் சியும் உடலில் கால்சியத்தை அதிகமாக உறிஞ்சி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது. 
  • பூசணியில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துவதோடு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.