காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் ஊறவைத்த வெந்தய நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆயிர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
இரவில் தூங்கும் முன், ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, ஊறவிடுங்கள். இப்போது மறுநாள் காலையில் வெந்தயத்தை தண்ணீருடன் சாப்பிடலாம்.
கிடைக்கும் நன்மைகள்
இன்சுலின்- வெந்தயத்தை முளை கட்டி சாப்பிடுவதால், நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
கொலஸ்ட்ரால்- வெந்தயம் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், இது கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, மாரடைப்பை அபாயத்தை பெருமளவு தடுக்கும்.
குடல் ஆரோக்கியம்- வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
வளர்சிதை மாற்றம்- ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமம் மற்றும் கூந்தலையும் இளமையாக வைத்திருக்க உதவும்.