பென் ஸ்டோக்ஸ் எடுத்த ரிவ்யூ - கிரிக்கெட் விதியை கேள்வி எழுப்பும் சச்சின் டெண்டுல்கர் , நடந்தது என்ன ?

benstokes review ashes4thtest ausvseng
By Irumporai Jan 07, 2022 10:52 AM GMT
Report

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். 16 ரன்கள் எடுத்திருக்கும்போது, கேமரூன் க்ரீன் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் தடுத்து ஆடாமல் விட்டார்

பந்து ஆஃப் ஸ்டம்பை பலமாக தாக்கியது. ஆனால், ஸ்டம்ப் மேலிருந்த ‘பெய்ல்’ கீழே விழவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்க நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார்.

ஆனால், பென் ஸ்டோக்ஸ் ரிவியூ கேட்டார். அப்போது 3-வது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பென் ஸ்டோக்ஸ் கூட இதை எதிர்பார்க்கவில்லை.

அப்பாடா தப்பித்தோம் என தொடர்ந்து பேட்டிங் செய்தார். 16 ரன்னில் அதிர்ஷ்டம் மூலம் தப்பித்த பென் ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்த நிலையில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டம்ப் மீது பந்து பட்டும் அவுட் கொடுக்காதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்த வீடியோவை பதிவிட்டு, ‘‘பந்து ஸ்டம்பை தாக்கிய நிலையிலும், ‘பெய்ல்ஸ்’ கீழே விழாததால், ஹிட்டிங் தி ஸ்டப்ஸ்’ என் விதியை கொண்டு வரலாமா?. நீங்கள் என்னை நினைக்கிறீர்கள்? பந்து வீச்சாளர்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

நடுவர் எப்படி அவுட் கொடுத்தார். அவர் அவுட் கொடுத்தது வினோதமாக இருந்தது என்று வார்னே கருத்து தெரிவித்த நிலையில் சச்சின் இவ்வாறு தெரிவித்துள்ளார்