ராஜஸ்தான் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

ipl benstokes rajastan royals
By Fathima Apr 14, 2021 02:56 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கெயிலுக்கு கேட்ச் பிடித்த போது, பென் ஸ்டோக்ஸின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது, இது பெரிதாகி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து, தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகிய நிலையில், பென் ஸ்டோக்சும் விலகியுள்ளதால் ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனினும் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியிலேயே நீடிப்பார் என்றும், அணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார் எனவும் அணி நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் | Ben Stokes Ruled Out Of Ipl Rajastan Royals