“நீயெல்லாம், மண்டையில ஒன்னு வெச்சா தான் சரிப்பட்டு வருவ” - ஜோ ரூட்டை தாக்கிய பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் 2021-22-ன் அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ம் தேதி தொடங்கும் நிலையில் பிரிஸ்பன் தோல்விக்குப் பதிலடி கொடுக்க இங்கிலாந்து தயாராகி வருகிறது.
பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் சரிவர ஆடவில்லை, பவுலிங்கில் ஆங்காங்கே சில பந்துகள் நன்றாக வந்தாலும் ஒட்டுமொத்தமாக அவரும் அடி வாங்கினார் என்றே கூற வேண்டும்.
நோ-பால்களாக வீசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. முதல் 5 ஓவர்களில் 14 நோ-பால்களை வீசினார் பென் ஸ்டோக்ஸ்.
இதில் ஒருமுறை வார்னர் பவுல்டு ஆனதும் வீணானது.
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் போது பவுண்டரியில் பந்தைத் தடுக்கும் முயற்சியில் லேசாக காயம் ஏற்பட்டது, இதனையடுத்து அவர் அடிலெய்ட் டெஸ்ட்டில் இருக்க மாட்டார் என்றெல்லாம் கருதப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெட்ஸில் கேப்டன் ஜோ ரூட் ஹெல்மெட்டைப் பதம் பார்த்து நான் ஃபிட் தான் என்று கேப்டனுக்கே நிரூபித்தார் பென் ஸ்டோக்ஸ்.
ஜோ ரூட்டின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பென் ஸ்டோக்ஸ் பவுன்சர் வீடியோ இதோ:
Ben Stokes hits Joe Root on the head in the Adelaide nets. Box office, always. pic.twitter.com/MBbac4RSsR
— Will Macpherson (@willis_macp) December 14, 2021
தன் காயம் பற்றி பென் ஸ்டோக்ஸ் ஊடகத்துக்கு தெரிவிக்கும் போது,
“களத்தில் இருக்கும் போது என் முழங்கால் முட்டியைத் தேய்த்துக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் முழு ஃபிட். இது பழைய காயம் அவ்வப்போது வந்து போகும் அதை சமாளிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்.
முதல் டெஸ்ட்டில் ஒரு கேட்சைப் பிடித்தது சில நோ-பால்களை வீசியது தவிர நான் வேறொன்றும் செய்யவிலை” என்றார்.
அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான் IBC Tamil