புது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Ben Stokes England Cricket Team
By Petchi Avudaiappan May 06, 2022 08:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் கவுண்டி அணிக்கான போட்டியில் அசத்தலாக ஆடியுள்ளார். 

சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.இவர் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடி வருகிறார். 

அந்த வகையில் வொஸ்டுஸ்சைர், டுர்ஹம் அணிக்கு இடையிலான  போட்டி நடைபெற்று வருகிறது.இதன் 2 ஆம் நாள் ஆட்டத்தில் டுர்ஹம் அணிக்காக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் டி20 போட்டியில் விளையாடியது போல் அதிரடி காட்டினார்.குறிப்பாக வொஸ்டுஸ்சைர் அணியில் வீசிய18 வயது சுழற்பந்துவீச்சாளர் ஜோஸ் பேக்கர் வீசிய ஒரே ஓவரில் 34 ரன்களை பென் ஸ்டோக்ஸ் விளாசினார். \

இதில் முதல் 5 பந்துகளில் சிக்ஸர்களும், கடைசி பந்தில் பவுண்டரியும் சென்றது. பென் ஸ்டோக்ஸ் 82 பந்துகளில் 161 ரன்கள் விளாசினார். இதில் 15 சிக்ஸர்களும் அடங்கும். இதில் கடைசியாக அடித்த 84 ரன்கள் 25 பந்தில் கிடைத்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் விளையாடும் முதல் தொழில்முறை போட்டி இது என்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வரும் ஜூன் 2ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.