"நிச்சயம் சென்னை ரசிகர்களுக்காக களமிறங்குவேன்..." - பென் ஸ்டோக்ஸ் பேட்டி

Ben Stokes IPL 2023
By Nandhini Mar 01, 2023 01:46 PM GMT
Report

நிச்சயம் சென்னை ரசிகர்களுக்காக களமிறங்குவேன்... என்று கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின.

இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் இங்கிலாந்து வென்றது. ஐபிஎல் கிரிக்கெட் ஏலம் 2023 - டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ben-stokes-cricketer-ipl-2023

நிச்சயம் களமிறங்குவேன் -

இந்நிலையில், இது குறித்து பென் ஸ்டோக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கவலைப்படாதீர்கள்... நான் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவேன். சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெமிங்கிடம் நிறைய பேசியிருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து அவர் நன்கு அறிவார் என்று பேசியுள்ளார்.