இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் இவர் தான்... ரசிகர்கள் வாழ்த்து
இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-1 என்ற கணக்கில் இழந்ததால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஜோ ரூட் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அடுத்த டெஸ்ட் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவாக இருந்திருக்கிறோம். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். வாழ்த்துக்கள் என ஜோ ரூட் பதிவிட்டுள்ளார்.