பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இடையே மோதல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் களத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் இடையே நடந்த மோதல் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாததது.
வெவ்வேறு அணியில் இருவரும் விளையாடிய நிலையில் அந்த தொடரின் ஒரு போட்டியில் பென் கட்டிங்கை போல்ட்டாக்கிய சோஹைல் தன்வீர் தனது 2 கைகளிலும் நடுவிரல்களையும் காட்டி அவரை அவமானப்படுத்தினார்.
Revenge is sweet ?? @Cuttsy31 ? #PZvsQG #bencutting #sohailtanvir pic.twitter.com/RFu30pznA0
— عَبْد اللّٰه خان????✨ (@pukhtann) February 15, 2022
இதனைத்தொடர்ந்து நடுவர்கள் அளித்த புகாரில் சோஹைல் தன்வீருக்கு ஒழுங்கீன நடவடிக்கையாக போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் கிட்டதட்ட 4 ஆண்டுகள் கழித்து தன்வீருக்கு பென் கட்டிங் பதிலடி கொடுத்துள்ளார். தன்வீர் வீசிய 19வது ஓவரில் பென் கட்டிங் 4 சிக்ஸர்களுடன் சேர்த்து மொத்தம் 27 ரன்களை விளாசித் தள்ளினார். இதன் பிறகு தன்வீரை பார்த்து தனது 2 நடுவிரல்களையும் காட்டி பழி தீர்த்துக்கொண்டார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை களநடுவர்கள் தீர்த்து வைத்தனர். ஆனால் கடைசி ஓவரில் விதி மீண்டும் விளையாடியது என்றே சொல்லலாம். நதீம் ஷா பந்துவீச்சில் பென் கட்டிங் தூக்கி அடித்த பந்தை தன்வீர் கேட்ச் பிடித்த உற்சாகத்தில் மீண்டும் அவர் தனது நடுவிரலை காண்பித்து பிரச்சினையை கிளப்பியுள்ளார்.