குரங்கு அம்மை வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம் : எங்கு தெரியுமா?

‎Monkeypox virus
By Irumporai May 23, 2022 05:53 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திய நிலையில் தற்போது மங்கி பாக்ஸ் எனக் கூறப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது, இந்த புதிய வகை வைரஸ் கடந்த 21-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 28 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இதுவரை இந்த பாதிப்புக்குள்ளானோர் யாரும் பலியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை வந்தால்  தனிமைப்படுத்துதல் கட்டாயம் : எங்கு தெரியுமா? | Belgium Monkeypox Quarantine Compulsory

குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோருடன் நேரடியாக உடல்ரீதியிலான தொடர்பு கொண்டவர்கள், அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கிய முதல் நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது.

கடந்த வாரம் அங்கு நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல் பதிவாகியதை அடுத்து, 21 நாள்கள் தனிமைப்படுத்தலைக் பெல்ஜியம் கட்டாயமாக்கியுள்ளது . நாட்டில் குரங்கு காய்ச்சல் தீவிரம் அடையாமல் இருக்க பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.