புதினை சந்தித்துப் பேசிய பெலாரஸ் அதிபர் கவலைக்கிடம் - உணவில் விஷமா?
புதினை சந்தித்துப் பேசிய பெலாரஸ் அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரகசிய சந்திப்பு
அணு ஆயுதங்களை பெலாரஸில் தேக்கிவைக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை, மாஸ்கோவில் உள்ள அவரது மாளிகையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ சந்தித்துப் பேசினார்.
ரகசியமாக நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து,

லுகாசென்கோ உடல்நலம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெலாரஸின் எதிர்க்கட்சித் தலைவர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார்.
அதிபர் கவலைக்கிடம்
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அதிபரின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக சிறப்பு மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பெலாரஸ் அதிபருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனைப் போக்கும் வகையில், லுகாசென்கோ-வின் உயிரைக் காக்க ரஷ்யா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.