ரஷ்யாவில் உள்நாட்டு போர் தொடக்கம்...வாக்னர் குழு தங்கள் முதுகில் குத்திவிட்டது - அதிபர் புடின்..!

Vladimir Putin Russo-Ukrainian War Russia
By Thahir Jun 24, 2023 11:07 AM GMT
Report

ரஷ்யாவில் உள்நாட்டு போர் தொடங்கி உள்ளதாக வார்னர் குழு டெலிகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ஓராண்டாக நீடிக்கும் போர் 

உக்ரை மீது ரஷ்யா ஓராண்டிற்கும் மேலாக போரை தொடர்ந்து வருகிறது. இந்த போரில் தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை என குறிப்பிடப்படும் வாக்னர் அமைப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ரஷ்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கியது.

ரஷ்யாவில் உள்நாட்டு போர் தொடக்கம்...வாக்னர் குழு தங்கள் முதுகில் குத்திவிட்டது - அதிபர் புடின்..! | Beginning Of Civil War In Russia

அதிபர் புதினின் நீண்ட நாள் நிழல் உலக கூட்டாளியாக இருந்து வந்தது வாக்னர் குழு. இந்த குழுவின் தலைவராக எக்னி பிரிகோசின் இருந்து வருகிறார். தற்போது இவர் தான் ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக புரட்சியை தொடங்கியுள்ளார். 

ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம் - வாக்னர் குழு 

இது குறித்து எக்னி டெலிகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஆயதமேந்திய கலகத்திற்கு அழைப்பு விடுத்ததோடு, கிரெம்ளினின் உயர்மட்ட அதிகாரிகளின் "தீமையை" நிறுத்துவதாக அவர் சபதம் செய்தார்.

அதன்படி, ”நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம்.

நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும்.

எங்கள் படைகளை ரஷிய ராணுவம் கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்” என எக்னி பேசியிருந்தார்.

நகரங்களை நோக்கி முன்னேறும் வாக்னர் குழு

இந்த நிலையில் வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.

பல முக்கிய நகரங்கள் வழியே தலைநகர் மாஸ்கோவை நோக்கி, எக்னியின் படை முன்னேறிச் செல்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனால் அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அதிபர் புதின் எச்சரிக்கை 

இப்படி பட்ட பரபரப்பான சூழலில் நாட்டு மக்களிடம் அதிபர் புதின் உரையாற்றினார். துரோகிகளிம் இருந்து நமது நாட்டை நாம் பாதுகாப்போம்.

Beginning of civil war in Russia

வாக்னர் குழுவினர் சரணடைய வேண்டும். ரஷ்யா ராணுவம் தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளார்.