பிச்சை எடுப்பதற்கு எதிரான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

india boy man
By Jon Feb 12, 2021 11:43 AM GMT
Report

பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என சட்டம் ஏற்றிய மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிச்சை எடுப்பது குற்றம் என கூறியுள்ள பஞ்சாப், மஹாராஷ்டிரா, உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தனித்தனியான சட்டங்களை இயற்றியுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்ட சட்டம் , இருந்தாலும்.

பெரும்பாலான மாநிலங்களில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக கூறப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்கு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் உள்ளன. குறிப்பாக பேருந்து, விமான மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக கூறப்படுள்ளது.

இந்த நிலையில், பிச்சை எடுப்பது விருப்பத்தின் பேரில் அல்ல அதற்கு மோசமான சூழ்நிலையே நிலையே காரணம். ஆகவே பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக அறிவிப்பது , பிச்சைகாரர்களுக்கு மேலும் அழுத்தத்தை தரும் வகையில் அமையும் என பல்வேறு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் இல்லை என 2018ல் டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.