இந்தியாவில் மொத்தம் இவ்வளவு பிச்சைகாரர்களா? அதிர்ச்சி அறிக்கை கொடுத்த அரசு

india report beggars total
By Jon Mar 12, 2021 01:56 PM GMT
Report

இந்திய நாட்டில் 4 லட்சத்திற்கும் அதிகமான பிச்சைக்காரகள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். 2011 இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

2011 கணக்கின் படி மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் இந்தியாவில் இருப்பதாக எழுத்து பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 2,21,673 பேர் ஆண்கள், 1,91,997 பேர் பெண்கள். நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில் அதிகளவிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர். மொத்தம் 81,224 பேர் மேற்கு வங்கத்தில் உள்ளனர்.

தொடர்ந்து உத்தர பிரதேசம், ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தலைநகர் டெல்லியில் 2,187 பேர் உள்ளனர். லட்சத்தீவில் 2 பிச்சைக்காரர்கள் தான் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.