''தனிமனிதன் கையேந்தினால் பிச்சை மக்கள் ஒன்றாக கையேந்தினால் அதற்கு பெயர் இலவசம்'': சீமான் ஆவேசம்
ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் ஜெயராஜ் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி சிலை அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாசிங்மிசின், கிரைண்டர் மிக்ஸி போன்ற இலவசங்கள் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
ஆனால் இது போன்ற பொருட்களை மக்களே வாங்கும் அளவிற்கு பொதுமக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என கூறினார். மேலும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வியில் முதல் மாநிலமாக உலக அளவில் தமிழகம் மாறும்.
பொதுமக்கள் இலவசம் கேட்டு கையேந்தும் நிலை நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாறும் என கூறினார்.
அதே சமயம் சீமான் கையேந்தினால் பிச்சை. மக்கள் அனைவரும் ஒன்றாக கையேந்தினால் அதற்கு இலவசம் என்று பெயர் என சீமான் பேசினார்.