பீருக்கு பதில் தயிர்: காண்டன மதுக்கடை உரிமையாளர்கள்
பீருக்கு பதிலாக தயிர் குடியுங்கள் என பொதுமக்களிடம் பிரச்சார ஒலி கொடுத்த அதிபருக்கு எதிராக மதுக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் என்பவர் மதுவுக்கு எதிரான கொள்கையை கொண்டவர்.
இவர் மதுவைக் குடிக்க வேண்டாம் என்றும் அது உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றும் அது மட்டுமின்றி மதத்திற்கு எதிரானது என்றும் அவர் அறிவுரைகளை வழங்கி வந்தார். அதுமட்டுமின்றி மேலும் துருக்கியர்கள் மது அருந்துவதை தவிர்த்து விட்டு குளிர்ந்த தயிரை அருந்துமாறும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மதுவுக்கு பதிலாக தயிரை அருந்துங்கள் என அதிபரே வலியுறுத்தி வருவதால் மது கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதனையடுத்து அவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதுக்கடை உரிமையாளர்கள் தங்களுடைய ஊழியர்களுடன் துருக்கியில் உள்ள முக்கிய சாலைகளில் டிரம்ஸ் வாசித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த 11 மாதங்களாக ஊரடங்கு காரணமாக நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மதுக்கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி மதுவுக்கு எதிராக அதிபரே ஐடியா கூறி வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.