இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!

Sri Lanka Tamil Nadu Police India Crime
By Vinoja Jul 06, 2025 09:48 AM GMT
Report

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்! | Beedi Leaves Worth Rs 60 Lakhs Mini Lorry Seized

அதனையடுத்து, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப் இன்ஸ்பெக்டர் ஜீவ மணி தர்மராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ் குமார் இசக்கி முத்து காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதன்போது , இலங்கைக்கு கடத்துவதற்காக மினி லாரியொன்றில் பீடி இலைகள் கொண்டுவரப்பட்டமை தெரியவந்துள்ளது.

போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த வாகனத்தில் சுமார் 30 கிலோ வீதம் 68 மூட்டைகளில் 2250 கிலோ பீடி இலைகள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.60 இலட்சம் ஆகும்.

கைப்பற்றபட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டவுள்ளது. அதனை கடத்த முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறன்றது.