படுத்த படுக்கையில் ரவீந்திர ஜடேஜா - அறுவை சிகிச்சை பற்றி உருக்கம்
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அறுவை சிகிச்சை
ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.அவருக்கு பதிலாக அக்சர் படேலை களம் இறங்குவார் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார். இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ள அவர்,
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பிசிசிஐ, சக இந்திய வீரர்கள், துணை ஊழியர்கள், மருத்துவர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
விரைவில் கிரிக்கெட்டுக்கு திரும்புவேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.