சிக்னல் கொடுத்தால்தான் சபாநாயகர் பேச அனுமதிக்கின்றார் : எடப்பாடி கண்டனம்
இன்று சட்டப்பேரவையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டம் சீர்குலைந்துவிட்டது
வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நாள்தோறும் நடைபெறுகிறது. தமிழக அரசு இதனை பாதுகாக்க தவறிவிட்டது .
அதனை சட்டப்பேரவையில் வாதிட கொண்டு வர நினைத்தோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அதற்க்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறினார்.
சிக்னல் வந்தால்தான் பேசமுடியுது
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் சரளமாக கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் அதிகளவில் போதை பொருளை பயன்படுத்தி தவறான பாதைக்கு செல்கிறார்கள் என கூறினார். மேலும், இதனை சட்டப்பேரவை கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் சட்ட பேரவை அனுமதிக்க வில்லை. அனுமதி மறுக்கப்பட்டது.
நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர் அப்படி செயல்படவில்லை.
எங்கள் கொரடா சபாநாயகரிடம் இதனை தெரிவித்து விட்டு தான் சட்டப்பேரவையில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆளுங்கட்சியில் இருந்து சிக்னல் வந்தால் தான் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கிறார். என ஆளுங்கட்சி மீது சரமாரி குற்றசாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.