மீண்டும் ஜெர்மனி அதிபரானார் பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் - குவியும் வாழ்த்துக்கள்
ஜெர்மனியின் அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு உலக நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜெர்மனி, நாடாளுமன்றத்தின் கீழவை மற்றும் 16 மாநிலங்களின் பிரதிநிதிகள் அதிபரை தேர்ந்தெடுத்தார்கள்.
இதனையடுத்து, பிரான்க் ஸ்டீன்மையர் பேசுகையில், ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கு பக்கத்தில் நான் இருப்பேன். ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இது தொடர்ந்து நடைபெற்று வந்தால், இது அந்நாட்டுக்கு ஒரு அபாயமாக இருக்கும். அங்கு வாழும் மக்களுக்கு அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு யார் செய்ய முயற்சி செய்தாலும், அவர்களுக்கு உறுதியான தக்க பதில் கொடுக்கப்படும் என்றார்.
