உங்களுக்கு வசீகரிக்கும் முக அழகு வேண்டுமா? கவலை வேண்டாம்... இதோ பாட்டி வைத்தியம்...!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். அவரவர் குணமே அவர்களுடைய அழகை பிரபலிக்கிறது. எல்லோருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அழகு தான் ஒருவருக்கு முதலில் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. ஒவ்வொருவரும் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
பார்லரில் உபயோகப்படுத்தம் படும் ரசாயனங்களால் உடனடியாக நிறம் பெற்றாலும் விரைவில் சருமம் முதிர்ந்துவிடும். சுருக்கங்கள் உருவாகி வயதான தோற்றத்தை பெற நேரிடும்.
மிக மிக எளிதாக வீட்டிலேயே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அன்றாடம் நாம் எப்படி நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.
தக்காளி
மஞ்சள் மற்றும் தக்காளியை கலந்து முகத்தில் தடவினால் அது சரும பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
கடலைப்பருப்பு
கடலை பருப்பு பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம், கால் கிலோ மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகு பெறும்.
பயத்தம் பருப்பு
முகம் பொலிவு பெற, எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், புதினா சாறு 2 ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும்.
கஸ்தூரி மஞ்சள்
வெயிலில் சென்று விட்டு வரும்போதெல்லாம் முகத்தை குளிர்ந்த நீரில் கஸ்தூரி மஞ்சள் போட்டு கழுவ வேண்டும். இப்படி செய்தால், வெயிலில் படியும் தூசி, கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உயிரிகளை அழித்து முகத்தை பொலிவு பெறும்.
தயிர்
முகம் பளிச்சென்று மின்ன, இரவு தூங்கும் செல்லும் முன், தயிருடன் சிறிதளவு ரோஸ்வாட்டரை கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும பளிச்சென்று மாறும்.
வாழைப்பழம்
தினமும் வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
உருளைக்கிழங்கு
தினமும் உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து பின்பு நீரால் கழுவினால், முகம் மிகவும் பொலிவு பெறும்.